“உங்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு...“ வாட்ஸ் அப்பில் வந்த ஒரு மெசேஜ் - நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தூத்துக்குடி காமநாயக்கன்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த லூர்துராஜ்-ஜான்சி தம்பதியரின் மகள் செல்போனுக்கு, கடந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில், லாட்டரியில் 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை நம்பிய ஜான்சி, ஆதார் உள்ளிட்ட விவரங்களை மர்ம நபர்களிடம் தெரிவித்ததுடன், பணத்தை அவர்களது வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், ஒன்றரை கோடி ரூபாய் கார் பரிசாக விழுந்ததாக கூறியதால் சந்தேகமடைந்த ஜான்சி, சுமார் 61 லட்சம் ரூபாய் வரை தன்னிடம் மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்தார். இதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீசார், கேரள மாநிலம் எர்ணாகுளம் முண்டன்வெளியைச் சேர்ந்த சான்டலிஸிஸ் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.