டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கொள்ளை முயற்சி- கொள்ளையனிடம் இருந்து ரூ.6.65 லட்சம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு

Update: 2023-07-11 03:43 GMT

குளச்சலில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர், கடையில் வசூலான 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயுடன், உடன் பணிபுரியும் ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் சென்று, பின்னர் தனது வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மறைவான பகுதியில் இருந்து முகமூடி அணிந்தபடி திடீரென்று வந்த மர்ம நபர், கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை பறிக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கோபாலகிருஷ்ணன், கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டாலும், பணப்பையை இறுக்கமாக பற்றிக்கொண்டு திருடனுடன் போராடி வந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததும், அந்த முகமூடி திருடன் அங்கிருந்து தப்பி விட்டார். இதில், படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்