வழிபாட்டு உரிமை சட்டம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-07-11 15:35 GMT

வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு அக்டோபர் 31 - ம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிராக அஸ்வினி குமார் உபாத்யாய், சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.இன்றைய விசாரணையில் மனுக்களுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார். இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க அக்டோபர் 31 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்