திருத்திய மின்கட்டண உயர்வு அடுத்த மாதம் அமல்? - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு முழுவதும், மின்சார வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்களை அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார். முதற்கட்டமாக 100 இடங்களில் சார்ஜிங் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வரவேற்பைப் பொறுத்து இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றார். மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளதாகவும், புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.