ரேசன் கடைகளின் பெயரை மாற்ற கேரள அரசு முடிவு

Update: 2022-12-06 04:32 GMT

ரேசன் கடைகளின் பெயரை 'கே ஸ்டோர்' என பெயர் மாற்றம் செய்ய, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் கீழ் இயங்கும், அனைத்து ரேசன் கடைகளின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ரேசன் கடைகள் அனைத்தும் கே -ஸ்டோர்களாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் ரேசன் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை கே ஸ்டோர்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்