கேரளாவில் கடந்த மே மாதம் முதல் டெங்கு, எலிகாய்ச்சல், டைஃபாய்டு, சிக்குன்குனியா உள்ளிட்டவைகளால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 56 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 16 பேருக்கு எலிக்காய்ச்சலும் மற்றும் இருவருக்கு H1N1 பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்ச்சலுக்கு நேற்று 7 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்து 594 பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ள நிலையில், அடுத்த 2 வாரங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.