தனுஷ்கோடி மணல் திட்டில்... குழந்தைகளுடன் தவித்த இலங்கை பெண் - மீட்ட ராமேஸ்வரம் மரைன் போலீசார்

Update: 2022-10-23 03:17 GMT

தனுஷ்கோடி மணல் திட்டில்... குழந்தைகளுடன் தவித்த இலங்கை பெண் - மீட்ட ராமேஸ்வரம் மரைன் போலீசார்

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் பெண்ணை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.

மூன்றாம் மணல் திட்டில், இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக, ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இலங்கையில் இருந்து வந்த தமிழ் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தி என்பதும், தனது மகன், மகளுடன் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கும் வந்ததும் தெரியவந்தது. மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, கணவனை இழந்த சாந்தியால் அந்நாட்டில் பிழைக்க வழியின்றி வீட்டை விற்று, குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்ததாக தெரிவித்தார். இதனிடையே, மூவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்