பல்லடம் அருகே போலீஸ் எனக் கூறி இளம்பெண்ணை கடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோபாஸ்டன் என்பவர் தனது காதலியுடன், ஊட்டிக்குச் செல்ல திட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் பல்லடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்த நபர், தான் ஒரு போலீஸ் என்றும், அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி, அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். இதில், சந்தேகமடைந்த ரோபாஸ்டன், பல்லடம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காணாமல் போன பெண்ணின் செல்போன் எண் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அப்பெண் மதுரையில் இருப்பதை அறிந்த போலீசார், அவரை மீட்டனர். மேலும், கடத்திய நபர் குறித்து விசாரனை மேற்கொண்டதில், அவர் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கணேசனை போலீசார் கைது செய்தனர்.