காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் பெற்றதாக பதிவான வழக்கில் கைதான அவர், நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தார். இதனிடையே, நிபந்தனைகளை நீதிமன்றம் தளர்த்திக் கொண்ட நிலையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த அவர், சிறப்பு பூஜை நடத்தி, காமாட்சி அம்மனை தரிசித்து சென்றார்.