தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சரியாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு தன் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததாகவும், தனிப்படை அமைத்து தேட, நான் என்ன சந்தன கடத்தல் வீரப்பனா? என்றும் கேள்வி எழுப்பினார்..