"ரேஷன் கடைகளில் மழையால் நனைந்த பொருள்களை வழங்க கூடாது" - கூட்டுறவுத் துறை பதிவாளர் வலியுறுத்தல்

Update: 2022-10-12 03:51 GMT

ரேஷன் கடைகளில், மழையால் சேதமடைந்த பொருள்களை மக்களுக்கு வழங்க கூடாது என்று அனைத்து மண்டல அலுவலர்களுக்கு கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முக சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,மழையால் பாதிப்புக்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளையும் கிடங்குகளையும் மேடான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்து, நுகர்வுக்கு ஏற்றதாக இல்லையெனில், அவற்றை உடனடியாக அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக நல்ல பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மழையால் நனைந்த அரிசி, சர்க்கரை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்