தொழிலதிபர் வீட்டில் ரெய்டு - 16 மணி நேரம் பணத்தை எண்ணி சோர்ந்து போன அதிகாரிகள்..!

Update: 2022-09-11 15:45 GMT

கொல்கத்தாவில் தொழிலதிபர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தை 16 மணி நேரமாக அமலாக்கத்துறையினர் எண்ணினர்.

மொபைல் கேம் செயலி மூலம் பண மோசடி நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, கொல்கத்தாவில் 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கார்டன் ரீச் பகுதியில் வசித்து வந்த தொழிலதிபர் அமிர்கான் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அங்கு 10 டிரக் இருப்பதை பார்த்த அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டனர்.

5 டிரக்கில் 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை எண்ணி முடிக்க, பணம் எண்ணும் இயந்திரங்களை வரவழைத்தனர்.

மலைபோல் குவிந்திருந்த பணம் 16 மணி நேரமாக எண்ணப்பட்டது.

மொத்தமாக 17 கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அமிர்கானிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேம் செயலியை பயன்படுத்தி அமீர்கான் பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்