காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெறவுள்ளார். கோட்டைக்கல் ஆரிய வைத்திய சாலையில் சுமார் 1 வார காலம் ராகுல் காந்தி அனுமதிக்கப்பட உள்ளார். வைத்திய சாலையின் மேலாண்மை இயக்குனர் மாதவன் குட்டியின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ராகுலுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான கே. சி. வேணுகோபாலும் தங்க உள்ளார்.