இருக்கை மாறி அமர சொன்னதால் ஆத்திரம் - நடத்துனர் மீது 6 பேர் சரமாரி தாக்குதல் - அதிர வைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2023-01-07 06:39 GMT

இருக்கை மாறி அமர சொன்னதால் ஆத்திரம் - நடத்துனர் மீது 6 பேர் சரமாரி தாக்குதல் - அதிர வைக்கும் சிசிடிவி காட்சி

கள்ளக்குறிச்சியில், தனியார் பேருந்து நடத்துனரை தாக்கிய, 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சேலம் அம்மாபேட்டை டி.எம்.எஸ் பேருந்து நிறுத்தம் அருகே நின்றபோது, 6 பேர் கொண்ட கும்பல், பேருந்து நடத்துனரான பாலசுப்பிரமணி என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பேருந்தில் வந்த பயணி ஒருவரை நடத்துனர் இருக்கை மாறி அமரச் சொல்லி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரச்சொல்லி இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில், நடத்துனரை தாக்கி தப்பியோடிய மாதங்கி தாசன், சபரி, சுபாஷ், மதன், மணிகண்டன், தனுஷ் குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்