உரிமம் இன்றி இயங்கிய கல்குவாரி மீது புகார் அளித்த விவசாயி விபத்தில் பலி - திட்டமிட்ட படுகொலை..? - உறவினர்கள் குற்றச்சாட்டு

Update: 2022-09-11 16:38 GMT

உரிமம் இன்றி இயங்கிய கல்குவாரி- புகார் அளித்த விவசாயி விபத்தில் பலி- திட்டமிட்ட படுகொலை..?

கரூர் அருகே, முன்பகை காரணமாக வேன் மோதி விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தில், கல்குவாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே, செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி, அருகே ஜெகன்நாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலப் பிரச்சினை தொடர்பாக, செல்வகுமார் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, கடந்த 2019ம் ஆண்டு ஜெகன்நாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், உரிமம் முடிந்த பின்னரும், செல்வகுமாரின் கல்குவாரி இயங்கி வருவதாக, கனிம வளத்துறைக்கு ஜெகந்நாதன் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சோதனை செய்து அந்த கல் குவாரியை மூடினர்.

இந்த நிலையில, க.பரமத்தி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகந்நாதன் மீது தனியார் வேன் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோரை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்