நடுங்க வைக்கும் கடும் குளிர் - பஞ்சாப், பீகார் மாநில பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
கடுங்குளிர் காரணமாக பஞ்சாப், பீகார் மாநிலங்களில் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் வரும் 8ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதேபோல பீகார் மாநிலம் பாட்னா நகரில் கடுங்குளிர் நிலவுவதால், அங்கு 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு மட்டும் வரும் 7ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.