நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் - குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் குடும்பத்தில் தகராறு?
கரூர் அருகே திருமணமான பெண் ஒருவர் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவரின் மனைவி சர்மிளா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது.
இதனால், குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சர்மிளா, திடீரென நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.