3 ஆண்டுக்கு முன் மாயமான கோபுர கலசம்.. திடீரென வயற்காட்டில் இளைஞர் கண் முன்னே... - ஆச்சரியத்தில் ஊர் மக்கள் !
- கந்தர்வகோட்டை அருகே 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான கோயில் கோபுர கலசம், வயற்காட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
- கந்தர்வகோட்டை அருகேயுள்ள பிடாரி அம்மன் கோயிலின் கோபுர கலசம், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமாகியுள்ளது.
- இந்தநிலையில் கபடி விளையாட சென்ற அப்பகுதி இளைஞர்கள், வயற்காட்டில் துணியில் கட்டிய நிலையில் கோபுர கலசம் கிடப்பதை கண்டுபிடித்தனர்.
- அதனை அவர்கள் வட்டாட்சியரிடம் ஒப்படைத்த நிலையில், அறநிலைத்துறைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, கோபுர கலசம் பிடாரி அம்மன் கோயில் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.