500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், ரேஷன் கார்டு வழங்குவதற்காக 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- இலுப்பூரைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர், புதிய ரேஷன் கார்டு பெறுவதற்காக, 2009ஆம் ஆண்டு வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
- அப்போது, முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சுப்பையா என்பவர், 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
- இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பச்சமுத்து புகார் அளித்த நிலையில், ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
- அதன்பேரில், ரசாயனம் தடவிய 500 ரூபாயை சுப்பையாவிடம் வழங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
- இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.