போராட்டம் அறிவித்த அதிமுக..! "கடைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்" - திமுக- பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் மனு

Update: 2022-12-28 01:59 GMT

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அதிமுக சார்பில் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடைகளை திறக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்களும், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன் தலைமையில் வணிகர் சங்கத்தினரும் டிஜிபி மற்றும் ஜஜியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்