கல் குவாரி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்... பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2022-12-19 13:40 GMT

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே அமைந்துள்ள குவாரிகளை அகற்றக் கோரியும் சாலை மறியல் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சி அமைதுள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், வெடி வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மேலும் 4 குவாரிகள் அமைக்க அரசிடம் கோரியிருப்பதாக தெரிகிறது. இதை எதிர்த்து இப்பகுதியினர் அன்னூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்