71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி | PMMODI

Update: 2023-05-16 17:12 GMT

பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடன் பிரதமர் உரையாடினார். அரசின் ஒவ்வொரு திட்டமும், கொள்கையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வாசலாக செயல்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் கிராமப்புறச்சாலை 7.15 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளதாகவும், விமான நிலையங்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் திறக்கப்பட்ட பொது சேவை மையங்கள் இன்று வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இளைஞர்கள் கிராம அளவிலான தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்