நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்குச் சென்ற பிறகு, பிரதமர் மோடியும், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனும் வர்ஜீனியாவில் உள்ள தேசிய அறிவியல் அகாடமிக்கு வருகை தந்தனர். அங்கு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான தொழில்கள் மற்றும் திறன்களை கற்கும் மாணவர்களுடன் இருவரும் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலையான பொராளாதார வளர்ச்சிக்கு திறமையான தொழில்நுட்ப அறிவு அவசியம் என்று கூறினார். அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்களும், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் பெரும் அளவில் இளைஞர் சக்தி உள்ளது என்றும் அதனால்தான், இந்தியா - அமெரிக்க கூட்டாண்மை, நிலையான உலகளாவிய வளர்ச்சிக்கு