என்.டி.ஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கட்சிகளின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்மறை எண்ணங்களோடு அமைக்கப்பட்ட கூட்டணி ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை என தெரிவித்தார். 90-களில் நாட்டின் நிலைத்தன்மையை குலைப்பதற்காக, காங்கிரஸ் கூட்டணியை பயன்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டினார். NDA -வில் N என்பது புதிய இந்தியா எனவும், D - என்பது வளர்ச்சி எனவும், A என்பது மக்கள் மற்றும் மாநிலங்களின் விருப்பங்கள் எனவும் மோடி விளக்கமளித்தார். மாநில விருப்பங்களின் அழகான வானவில்லே தேசிய ஜனநாயக கூட்டணி எனவும் அவர் குறிப்பிட்டார். தங்களது அரசியல் சுயலாபத்திற்காக எதிர்க்கட்சிகள் நெருங்கி வரலாம் எனவும், ஆனால் ஒருபோதும் ஒன்று சேர முடியாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 2024-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறிய அவர், கூட்டணியின் வாக்கு சதவீதம் 50 ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.