"முந்தைய அரசுகள் பழங்குடியினர் சமூகத்தை புறக்கணித்தனர்.." - பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Update: 2023-07-02 01:58 GMT

மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கான அட்டைகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த நோயை முற்றிலுமாக ஒழித்து, நாட்டில் உள்ள பழங்குடியின மக்களை பாதுகாக்க அரசு உறுதியேற்றுள்ளதாக கூறினார். உலகில் உள்ள ஒட்டுமொத்த அரிவாள் செல் ரத்த சோகை நோய் பாதிப்புகளில், பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவை சேர்ந்தவை என்ற பிரதமர், கடந்த 70 ஆண்டுகளாக இது குறித்து கவலைப்படாதது துரதிஷ்டவசமானது என்றும் வேதனை தெரிவித்தார். இதற்கு முந்தைய அரசுகள் பழங்குடியின சமூகத்தை தொடர்ந்து புறக்கணித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பழங்குடி நிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியபோது, எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதத்தை அனைவரும் பார்த்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்