"கர்ப்பமான அப்பா.." இந்தியாவில் இதுதான் முதல்முறை.. - மகிழ்ச்சியின் உச்சத்தில் தம்பதியினர்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதியில், சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாகவும், ஜியா பவுல் ஆணாகப் பிறந்து பெண்ணாகவும் மாறினர். தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை உணர்ந்த இந்த தம்பதி, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றுள்ளனர்.
சஹாத்துக்கு பிறந்த குழந்தை மற்றும் சஹாத் இருவரும் ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், குழந்தை ஆணா, பெண்ணா என கூறவில்லை. . இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும், முதல் மூன்றாம் பாலினத்தவராக உருவெடுத்துள்ளனர். இதனிடையே, சஹாத், சியா பவுல் தம்பதிகள் இருவருக்கும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்