இளவட்ட கல் தூக்குகின்ற போட்டியில் பட்டைய கிளப்பும் பெண்கள்..."சிங்கப்பெண்ணே...சிங்கப்பெண்ணே..."
இளவட்ட கல் தூக்குகின்ற போட்டியில் பட்டைய கிளப்பும் பெண்கள்..."சிங்கப்பெண்ணே...சிங்கப்பெண்ணே..."
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது.
இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பேசிய போது, இளவட்ட கல் தூக்குகின்ற விளையாட்டுப் போட்டியை தமிழக அரசின் விளையாட்டாக சேர்க்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இந்த போட்டியில், பல இளைஞர்கள் இளவட்ட கற்களை தூக்கி வலம் வந்து சாதனை நிகழ்த்தினர். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி போட்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். உரல்களை அதிகமுறை தூக்கிபோட்ட பெண்களுக்கு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது.