"3வது முறை மூழ்கி எழும்போது கையை நழுவ விட்டாரு"... சென்னையில் 5 இளம் உயிர்களை பறித்த குளம் - நேரில் கண்டவர்கள் அதிர்ச்சி பேட்டி

Update: 2023-04-05 12:14 GMT

சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் 5 தன்னார்வலர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்வின் போது கோயில் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என சுமார் 25 பேர் இறங்கியுள்ளனர்.

அப்போது ஒருவர் நீரில் தடுமாறவே அவரைக் காப்பாற்ற மீதி பேர் சென்றுள்ளனர்.

இவ்விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவர்களின் உடல்களை மீட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு இணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தது ராகவ், லோகேஷ்வரன், வனேஷ், சூரியா, ராகவன் உள்ளிட்ட 5 பேர் என்பதும், அவர்கள் அனைவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், அவர்களில் இருவர் கல்லூரியில் படிப்பதாகவும், மற்றவர்கள் வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைவரின் உடல்களும் குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

தீர்த்தவாரி குளத்தில் இறங்கும் நிகழ்வு குறித்து அனுமதி பெறவில்லை என பழவந்தாங்கல் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அறநிலைய துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்