தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு டெல்லி புறப்படும் விமானத்தில் செல்லும் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தமிழ்நாட்டின் நிலவரங்கள் குறித்து ஆலோசனை செய்யவுள்ள ஆளுநர் ரவி, வரும் 27ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.