"கற்பூரம் ஏற்றினால் கடும் நடவடிக்கை..." - ஐயப்ப பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதை தடுக்க, சேலம் ரயில்வே போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சபரிமலைக்கு ரயில்களில் செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலையில் எழுந்து வழிபாடு நடத்துவதுடன், கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், ரயிலில் தீ விபத்து ஏற்படும வாய்ப்புள்ளதால், ரயில்வே துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, சேலம் வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்களில், ரயில்வே போலீசார், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.