70,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

Update: 2023-07-22 02:29 GMT

மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை காலை காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். நாடு முழுவதும் இருந்து அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுப்பட்டிருப்பவர்கள், வருவாய்த் துறை, நிதிச் சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் பணிக்கு சேரவுள்ளனர். நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்