"எங்கடா இங்க இருந்த கொட்டகைய காணோம்.." Playground - டயே பறக்க விட்ட சூறைக்காற்று - அலறியடித்து ஓடிய மாணவர்கள்

Update: 2023-05-31 08:11 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையின் மேற்கூரை சூறைக்காற்றில் பறந்து செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெறும் நிலையில், பார்வையாளர்களுக்காக கொட்டகைகள் போடப்பட்டன. இந்நிலையில், நேற்று முன் தினம் உடுமலையில் சூறாவளிக் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்த நிலையில், கொட்டகையின் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டது... சேர்கள் பறந்தன... பார்வையாளர்களும், மாணவர்களும் அலறியடித்து ஓடின. இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சூறைக்காற்று சுழன்றடித்து பயமுறுத்தும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்