"இளம் வழக்கறிஞர்களுக்கு..." - கேரள முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Update: 2023-02-12 06:19 GMT
  • கேரளாவில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
  • குறைந்த ஊதியம் கொண்ட இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்திற்காக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கடந்த 2018ஆம் ஆண்டு கேரள அரசு அறிவித்த‌து.
  • ஆனால், திட்டம் செயல்படுத்தவில்லை.
  • தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது 3 ஆயிரம் ரூபாயாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
  • அதன்படி, உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் பினராயி விஜயன் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தில், 30 வயதுக்கு உட்பட்ட வழக்கறிஞர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அவர்கள், 3 வருடங்களுக்கும் குறைவாக வழக்கறிஞர் பயிற்சியில் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்