பிஎஃப்ஐ அமைப்பு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி கேரள அரசு மனு

Update: 2022-09-28 06:27 GMT

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாஅமைப்பு, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கேரளா அரசு போக்குவரத்து கழகமான கே​எஸ்ஆர்டிசி கேளர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் கடந்த 23 ஆம் தேதி, பிஎஃப்ஐ அமைப்பினர் முழுஅடைப்பு போராட்டத்தில் அழைப்பு விடுத்தனர்.

இதற்கு முழு ஆதரவு கிடைக்காததால், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதுடன், அரசுக்கு சொந்தமான 58 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதுடன், 30 பயணிகள்,10 ஊழியர்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், தங்களையும் வழக்கில் சேர்த்து கொள்ள மனுதாக்கல் செய்துள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பேருந்துகள் மீதான தாக்குதலால், 5 கோடியே 6 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை பிஎஃப்ஐ அமைப்பு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வன்முறை தொடர்பாக 309 வழக்குகள் பதிவு செய்துள்ள போலீசார், ஆயிரத்து 404 பேரை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்