"குழந்தைகளின் நண்பன்... ஊரின் காவலன்."கண்ணீரில் ஆழ்த்திய 'லட்டு' நாய்க்கு இறுதி மரியாதை செய்த மக்கள்..நெகிழ வைக்கும் சம்பவம்
கள்ளக்குறிச்சியில் மறைந்த செல்ல பிராணிக்கு அப்பகுதி இளைஞர்கள் பேனர் வைத்து முறையாக அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டைமேடு பகுதியில் லட்டு என்ற நாய் தெருமக்கள் அனைவராலும் பாசமாகவும், செல்லமாகவும் வளர்க்கப்பட்டு வந்தது... குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடும் லட்டு, அத்தெருவுக்கு பாதுகாவலராக விளங்கியதுடன் அனைவருக்கும் நல்ல நண்பனாகவும் திகழ்ந்தது...