புதினின் உருவ பொம்மையை கை, கால்களைக் கட்டி தூக்கில் தொங்கவிட்டு பரபரப்பை கிளப்பிய உக்ரைன் மக்கள்
உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள அவ்திவ்கா நகர நுழைவாயிலில் ரஷ்ய அதிபர் புதினின் உருவ பொம்மை கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் கட்டி தொங்க விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய படைகள் கிழக்கில் குறிப்பாக பக்முத் மற்றும் அருகில் உள்ள அவ்திவ்கா நகரில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.