ஒரே ஒருத்தருக்காக அரசையே எதிர்த்து திரண்ட மக்கள்..

Update: 2023-07-06 02:58 GMT

இஸ்ரேலின் டெல்அவிவ் நகர போலீஸ் கமிஷனர் பதவி விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவையில் உள்ள சிலரின் அரசியல் தலையீடு காரணமாக தான் பதவி விலகுவதாக டெல்அவிவ் நகர போலீஸ் கமிஷனர் அமி இஷத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான போராட்டங்களை கூடுதல் போலீசார் கொண்டு அடக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், டெல்அவிவ் நகர போலீஸ் கமிஷனருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே டெல்அவிவ் நகரில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்

Tags:    

மேலும் செய்திகள்