இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை -இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தகவல்

Update: 2022-12-20 02:29 GMT

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிமல்,

இத்திட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாத மத்தியில் துவங்கப்படும் என குறிப்பிட்டார்.

இலங்கை -தம்பதிவ' யாத்திரை என அழைக்கப்படும் புத்தகாயா செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்ளுக்கும் இந்த கப்பல் சேவை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்