சிமெண்ட கடை உரிமையாளர்ரின் குடும்பத்தை தாக்கிய கட்சி நிர்வாகிகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2022-11-30 14:08 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகன நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தமுமுக நிர்வாகிகள் சிலர், சிமெண்ட் கடை உரிமையாளரின் குடும்பத்தை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறமலைநகர் அருகே தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் சிலர் அருகில் உள்ள சிமெண்ட் கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இதில், கடை உரிமையாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம் முற்றியதால் கடை உரிமையாளரின் குடும்பத்தினரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்