பாண்லே பால் தட்டுப்பாடு, தர்ணாவில் இறங்கிய சமூக அமைப்பு - கல்லை வீசி கலைக்க முயன்ற மர்ம நபர்
புதுச்சேரியில் பால் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி, சமூக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு நிறுவனமான பாண்லே, 200க்கும் மேற்பட்ட பூத்துகள் மூலம், புதுச்சேரி முழுவதும் பால் விநியோகம் செய்து வருகிறது. இதற்கிடையே பால் போதுமான அளவில் கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை சரிசெய்ய கோரி, சமூக அமைப்பினர் மிஷன் வீதியில் உள்ள பாண்லே அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களில் ஒருவர் கற்களை வீசியதால், பால் பூத் கண்ணாடி உடைந்தது. இதனிடையே, கல்லை வீசி கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக, சைமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.