பல்லடம் அருகே சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நேற்று இரவு தனது மாற்றுத்திறனாளி குழந்தையுடன் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தையை வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏதுவாக, பேருந்து நிறுத்தத்திற்கு சற்று அருகில் தங்களை இறக்கி விடுமாறு பேருந்து நடத்துநரிடம் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துநர், அந்த பெண்ணையும், மாற்றுத்திறனாளி குழந்தையையும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், சுக்கம்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.