பாகிஸ்தானை புரட்டிப்போட்ட மழை...பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ பணக்காரர்கள் முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரிஃப் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழையால் இதுவரை 900க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிந்து மாகாணத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை அந்நாட்டு பிரதமர் பார்வையிட்ட போது, அரசின் உதவிகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் சர்வதேச உதவிகளைக் கோரியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ராணுவமும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.