பாக். வீரரை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

Update: 2022-09-29 09:00 GMT

ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2ம் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், 801 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருந்து 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். பேட்டர்கள் தர வரிசையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் முதலிடத்திலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 13ம் இடத்திலும், விராட் கோலி 15ம் இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்