"பாம்பை கண்டால் படையே நடுங்கும்" ஆனால் இவர்கள்..தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் பாம்பு பிடி வல்லுநர்கள்

Update: 2023-01-27 07:10 GMT

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இவர்களை கண்டால் பாம்பும் பம்மிவிடும்....

செங்கல்பட்டு சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன்....

அபாயகரமான, விஷமிக்க பார்க்கவே நடுங்கச் செய்யும் பாம்புகளையும் லாவகமாக பிடிப்பதில் வல்லுநர்கள்... கல்வி கற்கவில்லை என்றாலும் பாம்புகளை பற்றி நன்கு புரிந்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறையிலே பாம்புகளை பிடித்து மக்களுக்கும், வன உயிரினங்களுக்கும் காவலராக இருக்கிறார்கள். அமெரிக்க அரசுக்கே ஆம் இவர்களது புகழை உலகமே அறியும்...

அமெரிக்க அரசே இவர்களை அழைத்து பணியை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண உயிரியல் பூங்காவில் சுற்றித்திரிந்த மலைப்பாம்புகளை பிடித்து கொடுத்து அமெரிக்க அரசுக்கு 2017 ஆம் ஆண்டு உதவியுள்ளார்கள். அமெரிக்காவில் இரண்டு மாத காலம் வரையில் தங்கியிருந்து, 33 பர்மீஸ் ரக மலைப்பாம்புகளை பிடித்தவர்கள்.

16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அவர்கள் பிடித்த புகைப்படம் சிலிர்க்கச் செய்தது. இப்போது இவர்களுக்கு விலங்குகள் நல பிரிவில் பத்மஸ்ரீ விருதை அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது. பத்ம ஸ்ரீ விருதை பெறும் அவர்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்