ஆவின் நிறுவனத்தை, அழிவுப் பாதையில் இருந்து ஆக்கப்பூர்வ பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டுமென, தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, அழிப்பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், கொள்முதல் விலையை உயர்த்தவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.