துப்பாக்கி முனையில் ஆன்லைன் மோசடி! - பெண்களே குறி - தப்பி வந்தவர்களின் திக் திக் நிமிடங்கள்

Update: 2022-09-26 12:58 GMT

துப்பாக்கி முனையில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுடப வைக்கப்பட்டதால் மியான்மரில் இருந்து 8 லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்தி மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் தப்பி வந்துள்ளனர்...

தாய்லாந்து தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பு இருப்பதாக மாட்டுத் தாவணியைச் சேர்ந்த பாரதிராஜா என்ற ஏஜெண்ட் கூறியதை நம்பி மதுரையைச் சேர்ந்த காமேஷ் மகாதேவன், அஜய் ஜடேஜா ஆகிய அண்ணன் தம்பி இருவரும் 2 லட்ச ரூபாய் பணம் கட்டியுள்ளனர்... பயிற்சி என்ற பெயரில் துபாய்க்கு அழைத்து செல்லப்பட்ட சகோதரர்கள்... அங்கிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்... அங்கிருந்து மியாசூட் என்ற இடத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், தொடர்ந்து தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம், துப்பாக்கி முனையில் மிரட்டி 1 வருடத்திற்கான பணி ஒப்பந்தத்தில் கையெழுத்தும் வாங்கப்பட்டது... அங்கு ஆன்லைன் மூலம் பெண்களிடம் பணம் ஏமாற்றிப் பறிக்கும் வேலையை செய்ய இருவரும் நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து, மனம் ஒவ்வாமல் அண்ணன் தம்பி இருவரும் மதுரையில் உள்ள ஏஜென்டிடம் புலம்பவே, அவர் வேறு நபர்களை அங்கு அனுப்பி விட்டு இருவரையும் விடுவிப்பதாகக் கூறியுள்ளார்... வேலை செய்த நிறுவனத்திடமும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த சகோதரகள் இருவரும் உணவு கூட கொடுக்கப்படாமல் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர்... தொடர்ந்து இருவரும் பெற்றோரிடம் கதறி அழுது தங்கள் கஷ்டங்களைக் கூறியுள்ளனர்... இவர்களைப் போலவே அந்த நிறுவனத்தில் 30 இந்தியர்கள் பணியாற்றும் நிலையில், வேறு வழியின்றி இருவரும் 8 லட்ச ரூபாய் மதிப்பில் பிணைத் தொகையினைக் கட்டி அங்கிருந்து தப்பியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்