உத்தர பிரதேசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காஸிப்பூர் தொகுதி எம்.பி. அப்சல் அன்சாரியை குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய காசி போர் சிறப்பு நீதிமன்றம், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், எம்பி பதவியை இழக்க நேரிடும் என்ற விதியின் அடிப்படையில், அப்சல் அன்சாரியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல் தகுதி நீக்கம் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல், வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி ஆகியோரை தொடர்ந்து 3வது நபராக அப்சல் அன்சாரியும் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.