"ஒமிக்ரான் தொற்றால் பரவலோ, உயிரிழப்போ இல்லை" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
"ஒமிக்ரான் தொற்றால் பரவலோ, உயிரிழப்போ இல்லை" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்புகள் இல்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் விமான நிலையங்களில் மேற்கொண்ட ரேண்டம் சோதனையில், 183 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதில் 50 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒமிக்ரான் தொற்றால் எந்த பரவலோ, உயிரிழப்போ ஏற்படவுல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.