பழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவு... கால அவகாசம் கோரி போக்குவரத்துத்துறை கடிதம்

Update: 2023-04-02 02:25 GMT
  • 15 ஆண்டுகள் பயன்படுத்திய வணிக ரீதியான வாகனங்களை அகற்ற மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கால அவகாசம் கோரி போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது.
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்பட்டுவரும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய வாகனங்களை ஸ்க்ராப்பிங் முறையில் அகற்ற வேண்டுமென மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
  • இந்த நிலையில் தற்போது வரை தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்பட்டு வருகின்றன.
  • இதனிடையே ஸ்க்ராபிக் முறையில் காலாவதியான வாகனங்களை அகற்றும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், கால அவகாசத்தை ஐந்தாண்டுகள் நீடிக்கும்படி, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
  • குறிப்பாக போக்குவரத்து துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட வாகனங்களுக்கான கால நீட்டிப்பு செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்