'ஓல்ட் இஸ் கோல்ட்..!' பழமைவாய்ந்த கார்களின் கண்காட்சி.. காரைக்குடியில் குவிந்த மக்கள்

Update: 2023-01-22 06:52 GMT

காரைக்குடி அருகே, கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை முன்பு, பழமைவாய்ந்த கார்களின் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட, 17 பழமையான கார்களும், 50 வருட பழமையான மோட்டார் சைக்கிள்களும் பங்கெடுத்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

இந்த கண்காட்சியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்